Saturday, January 27, 2024

2024 பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றம்


 

 

 

 

 

 

 

 

  

 

 

2024 பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றம் 

அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்கள் மன்றம் வழங்கும்
இந்திய பட்டிமன்ற வரலாற்றில் முதன் முறையாக
புத்தம் புதிய தலைப்பில் சிரிக்க சிந்திக்கவைக்கும்
சிறப்பு பட்டிமன்றம்

ஆறாம் அறிவு
வரமா👍? சாபமா👎?

⚖நடுவர் : MK. மீரான்

வரமே👍
1. வாசுகி இராஜராஜன்
2. ⁠வெங்கடேஸ்வரன்
3. ⁠உமா வெங்கட்

சாபமே👎
1. நாகேந்திரன்
2. ⁠சித்ரா ஜெயகாந்தன்
3. ⁠இராஜபிரபு

பொங்கல் விழா - 2024

 


அனைவருக்கும் வணக்கம்,

நலம் நலம் அறிய ஆவல், நமது மன்றத்தின் பொங்கல் விழா வருகின்ற பிப்ரவரி 02 ஆம் தேதி சஹாரா ரெசார்ட் சிஹாத் இல் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெற இருக்கிறது. (கூகுள் மேப் வாட்ஸ் ஆப் குழுவில் வெளியிடப்படும்)

அனைத்து உறுப்பினர்களும்/விழா குழுக்களுக்கும் விழா சிறக்க அதன் தயாரிப்பு பணிகளில் பரபரப்பாக செயல்பட்டு கொண்டு இருக்குறீர்கள், வருகின்ற நாட்களில் இன்னும் பரபரப்பாக செயல்படுவோம்.

அனைத்து நிகழ்வுகளும் சிறக்க, தயாரித்த படைப்பை நல்லபடியாக விழா தினத்தன்று செயலாக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தாங்கள் பொறுப்பு எடுத்து நடைபெற உள்ள நிகழ்வுகளுக்கு தேவையான உடமைகள் அனைத்தும் விழா நிகழ்வு இடத்திற்கு வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது அவை உங்களிடம் அல்லது உங்கள் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக வாங்க வேண்டிய உடமைகளை பட்டியலிட்டு, அதை பிரித்து ஒவ்வொருவர் பெயர் இட்டு பொறுப்பு வழங்கப்படும். அதை வாங்கி விழா நிகழ்வு இடத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பி வைக்கப்படும்.          

உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை புரிந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

மேலும் நீங்கள் அழைத்து வரும் விருந்தினர்கள் விவரங்களை வருகை பதிவை குழுவிடம் தெரிவிக்கவும். அவர்கள் பதிவு செய்துவிட்டார்களா என்று சரிபார்த்து கொள்ளவும். விருந்தினர்களுக்கு தேவையான அறிவிப்புகளை தெரியப்படுத்தவும்.

கூட்டு முயற்சிக்கு மற்றும் ஒரு உதாரணமாக இந்த விழா நிகழ்வை வரலாற்றில் இடம் பெறச் செய்வோம்.

தொடர்புக்கு

Name

Email *

Message *