தமிழ்ச் சொல்வேந்தா்கள்
மன்றம்
இலக்குரை: “ வழுவிலாத்
தமிழும் வையத் தலைமையும் ”
தொடக்கம்: ஜூன், 2013
குறிக்கோள்கள்:
அல்கோபார் தமிழ்ச்
சொல்வேந்தா்கள் மன்றம் மன்ற உறுப்பினர்கள் தங்களின் பேச்சாற்றலையும் தலைமைத்துவப்
பண்புகளையும் வளர்த்துக் கொள்ளத் தக்க நல்ல சுமுகமான ஆதரவான சூழலை வழங்குவதின்
மூலம் அவர்களின் தன்னம்பிக்கையையும் பேச்சுத் திறமையும் மேம்படுத்திக்
கொள்வதற்கான வாய்ப்பினை அவா்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.
கூட்டம் நடைபெறும் இடம்: ரோஸ் உணவக அரங்கம்
கூட்டம் நடைபெறும் நாட்கள்: மாதமிருமுறை
வெள்ளிக்கிழமைகளில்.
நேரம்: மாலை 4.30 6.30
வழக்கமான நிகழ்ச்சிகள்: தயாரிக்கப்பட்ட பேச்சுக்கள், .திடீா்ப்பேச்சு, .மதிப்பீடுகள்
அரங்கம், தமிழோடு விளையாடு மற்றும் சிறார் நேரம்.
சிறப்பு நிகழ்ச்சிகள்:
பட்டிமன்றம், மின்னிதழ் வெளியீடு, கவியரங்கம், விவாத
மேடைகள், பன்னாட்டு
சொல்வேந்தா் கழகத்தின் வருடாந்திர நிகழ்வுகள் மற்றும் பயிற்சி பட்டறைகள்.
தலைமைத்துவப்
பயிற்சிகள்: கூட்ட ஒருங்கிணைப்புப் பணிகள், கூட்ட
நெறியாள்கைப் பணிகள், செயற்குழுவின்
பொறுப்புகள், பன்னாட்டு சொல்வேந்தா்கள் கழகத்தின் பகுதி, வட்ட, மாவட்ட
அளவிலான பொறுப்புகள் மற்றும் பயிற்சி பட்டறைகள்.
நிர்வாக அமைப்பு:
பன்னாட்டு சொல்வேந்தா்கள் மன்ற விதிகளின் படி தேர்வு செய்யப்பட்ட செயற்குழு.
சர்வதேசம் அமைப்பின் இணையதள முகவரி
http://www.toastmasters.org/
சர்வதேசம் அமைப்பின் இணையதள முகவரி
http://www.toastmasters.org/
No comments:
Post a Comment