*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்*!!
நம் மன்றத்தின் *110 - வது*கூட்டம் வரும் *ஜூலை 21 சனிக்கிழமை*,சீ-வியூ(அல்கோபார்) குடியிருப்பு வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோடையில் கொண்டாட்டமாக சொ.வே. சுரேஷ் பொன்னுசாமி அவர்களின் “*அன்னை நிலத்தில் அருவிகள்* “ என்னும் நெறியைக் கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். மேலும்,
இன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசானாக சொ.வே. ரமேஷ் அவர்களின் “*வியல்*” என்னும் சொல்லைக் கொண்டு மூன்று திட்டப் பேச்சுகள் மற்றும் திடீர் பேச்சரங்கம் என்று அறிவொளி பாய்ச்சும் அறிவார்களைக் கொண்டு சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், காட்டருவி போல அணிதிரள்வீர் என்று அன்புடன் அழைக்கின்றேன்.
*துணைத் தலைவர் (கல்வி)*
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு