அல்கோபார் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்!!
உலகில் வாழும் ஆயிரக்கணக்கான மொழிகளிடையே ஈராயிர, மூவாயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட மொழிப் பழமையும் 25 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கிய வாழ்வுத் தொடர்ச்சியும் உடைய மொழிகள் சீனமும் தமிழும் மட்டுமே.மேலும், பழமைக்கு பழமையும், புதுமையிற் புதுமை மாறா இளமையையும் கொண்டுள்ளது தமிழ்மொழி. இத்தகைய அரிய மொழியை போற்றும் வகையில் அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் தமிழின் மீது கொண்ட நேசம், தமிழர் மீது கொண்ட நேசமாக ஒளிகொண்டு பிரகாசிக்கிறது.
அந்தவகையில் வரும் செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல்-கையாம் உணவகம் (தம்மாம்) நம் மன்றத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சொ.வே.ராஜதுரை அவர்களின் “தந்தையின் அன்பினிலே” என்னும் அருமையானநெறியைக் கொண்டு கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், இன்றை சொல் மற்றும் இலக்கண ஆசானாக சொ.வே. உமாவெங்கட் அவர்கள் “ நசை “ எனும் இலக்கணச் சொல்லை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் . அதனுடன் திட்டப் பேச்சு திடீர்ப் பேச்சரங்கம் என்று வானத்தின் ஒலி வீச்சினைக் காணலாம் வாருங்கள்
ஒரு சிலவரிகளில் ஓராயிரம் உணர்வுகளையும் பிம்பங்களையும் பதிவு செய்ய கவிதையினால் மட்டுமே முடியும் அந்தவகையில் நம் மன்றத்தின் கவியரங்கம் சொ.வே. மீரான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. முத்தமிழர் அனைவரும் அணி திரள்வீா். இத்துடன் நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்
துணைத் தலைவா் (கல்வி)
No comments:
Post a Comment