தமிழ் நேசமும் தமிழர் நேசமும் தகிக்கின்ற
அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!!
உங்கள் அனைவருக்கும்
முத்தமிழ் வணக்கம்!!
நம் மன்றத்தின்
114 வது கூட்டம் வரும் *செப்டம்பர்
22 சனிக்கிழமை இளங்காற்றாய்
தவழவிருக்கிறது. இக்கூட்டத்தில்
பாரதியாரின் நினைவு தினமாகிய செப்டம்பர்
12 ஐ சிறப்பிக்கும்
வகையில் பாரதியின் பைந்தமிழ் வரிகளில் நீராடவிருக்கும்
சொ.வே. ராஜபிரபு அவர்கள் “ யார் பாரதி? “ * என்னும் நெறியைக் கொண்டு கவின் மாலையாய் *மூன்று திட்டப்பேச்சும்
மேலும், இன்றையச் சொல் மற்றும் இலக்கண ஆசானாக சொ.வே. சுரேஷ், ஈதல் என்னும் சொல்லை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இச்சொல்லை அன்றைய கூட்டத்தில்
கோபுரமாய் விளங்கிடச்
செய்வோம். புயலின்
கைத்தலமாய் திடீர் பேச்சரங்கம்
என்னும் உய்யானவனத்தில்
சொ.வே. சிவசக்தி அவர்கள் நம்மை மகிழ்விக்கவிருக்கிறார்.
இக்கூட்டத்தில் மற்றும் ஒரு சிறப்பான “ பயிற்சிப் பட்டறையை “ நடத்திக் கொடுக்கவிருப்பவர்
சொ. வே. ஆசிக். சொல்வேந்தர்களே!!,
* தமிழ் சாகரத்தில்
*முகிழ்த்தெழ வாரீர். இத்துடன் 114 - கூட்டத்தின்
நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்.
நன்றி.
துணைத் தலைவர் கல்வி,
சொ.வே. பாக்கியலட்சுமி
வேணு
No comments:
Post a Comment