உடலுக்கு உரமேற்றும் உயிர்க்கு உணர்வூட்டும் மொழி, தமிழ். இலக்கிய இலக்கண அழகுடன், காலத்தை வென்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இனிமை குன்றாமல் நெஞ்சத்தை நெகிழச் செய்யும், அருந்தமிழ் தந்த அடையாள அரங்கத்தில் எழுது கோல் பிடித்து எண்ணங்களைப் பகிரும் எல்லையற்ற கனவுகள் சுமந்திருக்கும் *அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!! உங்கள் அனைவருக்கும் இளந்தமிழ் வணக்கம்.*
நம் மன்றத்தின் *116 கூட்டம் வரும் அக்டோபர் 19 வெள்ளிக்கிழமை* *அல்கயாம் உணவகத்தில்* (தமாம்) நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தின் நெறியாக *“பேச்சுக் கலை”* என்னும் தலைப்பினைக் கொண்டு உயர்தனிச் சஞ்சாரம் நிகழ்த்தவிருக்கும் *சொ.வே. மீரானின்* நெறியாளுகையி்ல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. சொல்லேர் உழவனாக இன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசானாக சொ.வே. சீனிவாஸ்அவர்களின் *“உன்னிப்பு”* என்ற சொல்லைக் கொண்டு *மூன்று திட்டப் பேச்சு, திடீர் பேச்சரங்கம் மற்றும் சிறுவர் நேரம்* என்று உல்லாச வனமாய் திகழவிருக்கிறது இவ்வனத்தில் தமிழ் மேகமென தவழ்ந்து விசையுடன் வாரீர், இத்துடன் *வரைவு நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்* நன்றி.
No comments:
Post a Comment