அல்கோபார் தமிழ் உறவுகளே உங்கள் அனைவருக்கும்
வணக்கம்!!
ஒரு மொழியின் இலக்கியம் என்பது கண்ணாடியைப் போலச்
செயல்பட வேண்டும். முகம் பார்க்க உபயோகிப்பதோடு, பிரதிபலிக்கும் நம் பிம்பத்தைச் சரி பண்ணிக்
கொள்ளவும் அக்கண்ணாடி உதவுவதைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் வங்கத்தின் மூத்த
கவிஞரான சுபாஷ் முகோபாத்யாய.
அத்தகையச் சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அதனால்
தான் சங்க காலம் தொடங்கி இக்காலம் வரையில் நம் மொழியின் இலக்கிய வேர்களை மறவாத வெற்றியாளர்களைக்
கொண்டது சொல்வேந்தர் மன்றம். நம் மன்றத்தின் 115 வது கூட்டம் அக்டோபர் 5, வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது
அழுத்தமான ஆழமான அனுபவங்கள் தரும்
உணர்வுகளில் ஒரு படைப்பாளி சரணாகதி அடையும் போது தான் உன்னதமான இலக்கியங்கள் பிறக்கிறது
என்பர். அத்தகைய இலக்கியங்களை வாசிப்பதன் அவசியத்தையும் அனுபவத்தையும், “வாசிப்பு என்பது வழக்கம் ஆக..... “
* என்னும் நெறியாளுகையில்
பேசவிருக்கிறார் *சொ.வே. மோகன் தாஸ்.
மேலும் இன்றையக்
கூட்டத்தின் சொல்லோர் உழவனாக, இன்றைய சொல் மற்றும்
இலக்கண ஆசானாக சொ.வே. பாக்கியலட்சுமி அவர்களின் “விசை” என்ற இலக்கணச் சொல்லுடன் சோதிமிக்க மூன்று திட்டப் பேச்சுகளைக் கொண்டு
கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் கூட்டத்தை
வளப்படுத்தும் விதமாக சொற் செல்வி சொ.வே வாசுகி ராஜராஜன் அவர்களின் திடீர்
பேச்சரங்கம் மற்றும், நம் மன்றத்தின் “ தமிழ் விருட்சம் சொ.வே. ஹைதர் ” *அவர்களின் “ தமிழோடு விளையாடு “ என *தமிழ்ப் பண்
பாடலாம் வாருங்கள். இத்துடன் வரைவு நிகழ்ச்சி நிரலை இணைத்துள்ளேன்.
துணைத் தலைவர் கல்வி,
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு
No comments:
Post a Comment