*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்!! *
வெட்டி யடிக்குது மின்னல் கடல்
வீரத் திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் கூ!!
கூவென்று!! விண்ணைக் குடைகிறது காற்று
சட்டச்சட!! சட்டச்சட டட்டா!! என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்கிறது வானம்
எட்டுத் திசையும் இடிய மழை!!
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா! (புதுச்சேரி வாசி )
என்று தமிழின் சோம்பலை முறித்தான் *பாரதி *
இன்றும் *அரபு வானமும்*நம்மிடையே இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறது. சொல்வேந்தர்களே நம் மன்றத்தின் *118 வது* கூட்டத்தில் தமிழ் மழையில்நனைய *பட்டினப் பாலையும் பழந்தமிழர் நாகரீகமும்* என்னும் தலைப்புடன் புதுச்சேரி வாசி *சொ.வே. ராஜராஜன்* அவர்களின் நெறியாளுகையில், சொல்லேர் உழவனாக *சொ.வே. குணா* அவர்களின்“ *உரன்* “ என்னும் சொல்லைக் கொண்டு மூன்று திட்டப்பேச்சுகள் அதனுடன் *பன்னாட்டு பேச்சு மற்றும் மதிப்பீட்டிற்கான பயிற்சி பட்டறை நடக்கவிருக்கிறது* இதனை, இரண்டு முறை மாவட்டம் எஃப் போட்டியில் வெற்றி கண்ட *சொ.வே. அஜீஸ் செபாஸ்டியன்*🤝 நமக்காக வழங்கவிருக்கிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் *வரைவு நிகழ்ச்சி நிரலையும்* இணைத்துள்ளேன்.
*துணைத் தலைவர் கல்வி*
சொ.வே. பாக்கியலட்சுமி
No comments:
Post a Comment