*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!!*
ஒரு மனிதன் தான் பிறந்த சூழலுக்குப் பொதுவாக பொறுப்பாளியாவதில்லை ஒரு மனிதன் தன்னை என்னவாக மாற்றிக் கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறான். என்பார் *அலெக்சாண்டர் கிரஹாம் பெல்*
அவ்வகையில் நம் மன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தலைமைத்துவ பண்புகளின் பிறப்பிடமான இந்த சொல்வேந்தர் மன்றத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்.
நம் மன்றத்தின் *117 வது கூட்டம் நவம்பர் 2 வெள்ளிக்கிழமை,* அல்கயாம் உணவக அரங்கில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் நம் மன்றதின் தலைவர் *சொ.வே. இராமமூர்த்தி* அவர்களின் *“இனிய உளவாக”* என்னும் நெறியினைக் கொண்டு நடைபெறவிருக்கிறது இவரின் தமிழ்மொழி செழுமையும், சொல்வளமை, ஓசை ஒழுங்கு ஆகியன இயற்கையாக வந்து குழைகின்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று
இக்கூட்டத்தில் சொல்லேர் உழவாக *“ நயம் “* என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளார், *சொ.வே. மோகன்தாஸ்* அவர்கள். இதனுடன், சீர்மிகு *மூன்று திட்டப் பேச்சுகள்* மற்றும் *திடீர் பேச்சரங்கம்* என மன்றத்தின் கூட்டம் ஒளிவிட்டு பிரகாசிக்கவிருக்கிறது. அணிதிரள்வீர்!! இத்துடன் *வரைவு நிகழ்ச்சி நிரலையும்* இணைத்துள்ளேன்.
துணைத் தலைவர் கல்வி
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு