Sunday, December 16, 2018

பன்னாட்டு சொல்வேந்தர்கள் மன்றத்தின் வருடாந்திர ஆங்கில பேச்சுப் போட்டி


அன்புமிகு சொல்வேந்தர்களுக்கு வணக்கங்கள்..

பன்னாட்டு சொல்வேந்தர்கள் மன்றத்தின் வருடாந்திர ஆங்கில பேச்சுப் போட்டிகளுக்கு நமது மன்றத்திலிருந்து சிறந்த போட்டியாளர்களை அடுத்தடுத்த நிலைகளுக்கு தேர்ந்தெடுத்து அனுப்பும் நோக்கோடு ஆண்டுதோறும் ஆங்கில பேச்சுப் போட்டிகளை நம் மன்றத்தில் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டிற்கான போட்டிகள் நடத்துவது தொடர்பாக 14/12/2018 மாலை 8:30-9:30 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்தோம். அதன் விவரங்கள் பின்வருமாறு.

இந்த ஆண்டிற்கான போட்டிகளும் வழக்கம் போல் கீழ்கண்ட நான்கு வகைகளிலும் நடைபெற உள்ளது.

1.         International Speech Contest
2.         Humorous Speech Contest
3.         Evaluation Speech Contest
4.         Table Topic Speech Contest

இந்த போட்டிகள் எதிர்வரும் 2019, ஜனவரி 5ம் நாள், சனிக்கிழமை நடைபெறும். இதற்கான நிகழ்விடம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த போட்டிகளுக்கான நெறியாளராக (Contest Chair) பனோரமா சொல்வேந்தர்கள் மன்றத்தின் தலைவரும், தொடர்ந்து நம் மன்றத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் சொல்வேந்தர் வெங்கட் ரெங்கமன்னார் அவர்களும், தலைமை நடுவராக (chief Judge) பகுதி 60ன் முன்னாள் இயக்குனர் சொல்வேந்தர் சங்கரன் உன்னி அவர்களும் இசைவு தெரிவித்துள்ளார்கள்.

சொல்வேந்தர்கள் மன்றத்தின் அடுத்தடுத்த கட்டப் போட்டிகளில் பங்கெடுக்க வகை செய்யும் இந்த வாய்ப்பினை  அனைத்து சொல்வேந்தர்களும் பயன்படுத்தி, போட்டிகளில் கலந்து கொண்டு, தங்களது பேச்சுத்திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்திட அன்புடன் வேண்டுகின்றோம்இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான முக்கிய விதிமுறைகள்:

போட்டிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
போட்டிகள் அனைத்தும் TMI Speech Contest Rulebook (July 1, 2018- June 30,2019) விதிமுறைகளுக்கு உட்பட்டது.
போட்டியில் பங்குபெறும் உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் கட்டணம் செலுத்தி TMI website-ல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியை நிறைவு செய்த உறுப்பினர்கள் அனைவரும் Humorous Speech Contest, Evaluation Speech Contest & Table Topic Speech Contest ல் பங்கேற்கலாம்.
International Speech Contest-ல் பங்கேற்க வேண்டுமெனில் CC-manual-ல் குறைந்தது 6 திட்டங்கள் முடித்திருக்க வேண்டும் அல்லது Pathways முறையில் குறைந்தது 2-levels முடித்திருக்க வேண்டும்.
TMI Speech Contest Rulebook (July 1, 2018- June 30,2019)- கீழ்கண்ட இணைப்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன் நகல் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளதுhttps://www.toastmasters.org/-/media/files/department-documents/speech-contests-documents/1171-speech-contest-rulebook.ashx

இந்த போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர்களை நமது மன்றத்தின் துணைத்தலைவர் கல்வி. சொ.வே பாக்யலெட்சுமி அவர்களிடம் செலுத்திட வேண்டுகின்றோம். அதுமட்டுமன்றி, இப்போட்டிகளுக்கான பல்வேறு ஏற்பாட்டுப் பணிகளில் உங்கள் பலரது பங்களிப்பும் தேவைப்படுகின்றது.. இது தொடர்பாக விரைவில் உங்களைத் தொடர்பு கொள்கின்றோம். இந்த நிகழ்ச்சிக்கான நிதித் தேவைகளை ஏற்பாடு செய்வதற்கு உதவி செய்ய முன்வருபவர்கள் (தங்கள் அலுவலகம் மூலமாகவோ அல்லது வெளித்தொடர்புகள் மூலமாகவோ) அன்புடன் தொடர்பு கொள்ளவும்.

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தேதிகள்:

•     பெயர்களைப் பதிவு செய்ய இறுதி நாள்: 23-டிசம்பர்-2018
•     போட்டி நடைபெறும் நாள்: 05-ஜனவர்-2019 மாலை 2:00 மணி முதல் 9:30 மணி வரை

போட்டிகள் தொடர்பாக ஏதேனும் மேல்விபரங்கள் தேவையெனில் உங்கள் மதியுரையாளரையும், அனுபவமுள்ள உறுப்பினர்களையும் அணுகுங்கள். Youtube ல் பல முந்தைய போட்டிகளின் பதிவுகள் உள்ளனஇன்னும் மூன்று வார கால இடைவெளி இருக்கிறது.. உங்கள் தயாரிப்புகளை சிறப்பாகச் செய்து வெற்றி வாகை சூடிட வாழ்த்துக்கள்

அன்புடன்,
இராமமூர்த்தி

No comments:

Post a Comment

தொடர்புக்கு

Name

Email *

Message *