Sunday, March 24, 2019

126 வது கூட்டம்


*கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்*
*கழையிடை ஏறிய சாறும்*,
*பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்*
*பாகிடை ஏறிய சுவையும்,*
*நனிபசு பொழியும் பாலும் - தென்னை*
*நல்கிய குளிரிள நீரும்*,
*இனியன என்பேன் எனினும் - தமிழை**
*என்னுயிர் என்பேன் கண்டீர்!*
கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் - அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் *பாவேந்தர் பாரதிதாசன்*  கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா!. 
இத்தகு சுவைமிகு தமிழின் மீது பற்று கொண்ட*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!!* நம் மன்றத்தின் *126 - வது கூட்டம்* வரும் *மார்ச் 29 வெள்ளிக் கிழமை* நடைபெறவிருக்கிறது. இதில், நம் மன்றத்தின் தமிழ்த் தென்றல்  *சொ.வே. வெங்கடேஸ்வரன்*அவர்களின், நெறியாளுகையில்  சொல்லேர் உழவாக இன்றையச் சொல் மற்றும் இலக்கண ஆசானாக *சொ.வே. அரவிந்தன்* அவர்களின் *“ஏண்”*என்னும் சொல்லைக் கொண்டு *மூன்று திட்டப் பேச்சுகள்* மற்றும் *திடீர் பேச்சரங்கம்*என்று கோடையில் குளிர் தமிழ் காற்றினைக் கொண்டாட!! *அனைவரும் வாரீர்*இத்துடன் 126-வது கூட்டத்தின் *வரைவு நிகழ்ச்சி நிரலையும்* இணைத்துள்ளேன்.

துணைத் தலைவர் கல்வி
*சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*

Tuesday, March 12, 2019

125 வது கூட்டம்


*பெண்ணே!!*
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி 
தடைகளைப் புறம் தள்ளு 
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு 
உள்ளிருந்து திறம் காட்டும்
*பெண்ணினத்தின் மேன்மையை*, 
முன்னிறுத்தும் வழி தேடு!

என, பெண்ணின் பெருமை பேசும் *அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்*. நம் மன்றத்தின் *125 வதுகூட்டம் வரும் வெள்ளிக் கிழமை *மார்ச் 15* அன்று நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில், “*ஈன்று புறம் தந்த**” பெண்ணின் பெருமையைப் போற்றும் படியாக அமையவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நம் மன்றத்தில் பைந்தமிழ் பேசும் *சொ.வே. வாசுகி ராஜராஜன்அவர்களின் “*அழகின் அழகே*” என்னும் நெறியினைக் கொண்டு  சீர்மிகு மூன்று *திட்டப்பேச்சுகள்மற்றும் *மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கமும்*நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் 125 வது கூட்டத்தின் *வரைவு நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்*.நன்றி.

குறிப்பு : கருத்தரங்கின் கருப்பொருள்   “*பெண்ணின் பெருமை போற்றும் படி*” அமைந்திருக்க வேண்டும் தலைப்பு *உங்கள் விருப்பம்.*

*துணைத் தலைவர் கல்வி
*சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*



Friday, March 1, 2019

*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்*
நம் மன்றத்தின் *124*- வது கூட்டம்

துணைத் தலைவர் கல்வி 
*சொ.வேபாக்கியலட்சுமி வேணு*


தொடர்புக்கு

Name

Email *

Message *