Friday, May 31, 2019
Saturday, May 18, 2019
2019-2020ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள்.
மே 17, 2019 அன்று, 2019-2020 வருடத்துக்கான செயற்குழு தேர்தல் நடைபெற்றது, அன்றைய தினம் கீழ்காணும் மன்ற உறுப்பினர்கள் செயற்குழுவிற்க்காக தேர்ந்தெடுக்க பட்டனர்
2019-20ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள்.
தலைவர்: சொ.வே பாக்யலெட்சுமி
து.த கல்வி: சொ.வே சீனிவாசன்
து.த உறுப்பினர் சேர்க்கை: சொ.வே சுரேஷ் சுப்ரமணியம்
து.தலைவர் மக்கள் தொடர்பு:
சொ.வே மோகன்தாஸ்
செயலாளர்: சொ.வே. மீரான்
பொருளாளர்:சொ.வே. ஶ்ரீனிவாஸ்
செய்வகர்: சொ.வே.சுலைமான்
புதிய செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Wednesday, May 15, 2019
129 வது கூட்டம்
தமிழே விழி! தமிழா விழி!
பயிராலே நிலம் அறிமுகமாவது போலவும்
பழத்தாலே மரம் அறிமுகமாவது போலவும்
நிழலாலே உருவம் அறிமுகமாவது போலவும்
இலக்கியங்களாலே மொழி அறிமுகமாவது போலவும்
அரபு மண்ணில் “தமிழ்” சொல்வேந்தர்களால் அறிமுகமாவது போலவும்
நம் மன்றத்தின் ஒவ்வொரு கூட்டமும் முரசறைந்து முழங்குகிறது.
அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!! விருந்தினர்களே!! குழந்தைகளே!! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்
நம் மன்றத்தின் 129 - வது கூட்டம் வரும் மே 17 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல்கயாம் உணவகத்தில் நடைபெறவுள்ளது. உங்களை!! “ புத்தம் புது பூமிக்கு” அழைத்துச் செல்லவிருக்கிறார் நெறியாளர் சொ.வே. ராஜபிரபு, அன்றையக் கூட்டத்தில் சொல்லேர் உழவாக சொ.வே. மோகன்தாஸ் அவர்களின் “ ஊக்கம் “ என்னும் சொல்லைக் கொண்டு மூன்று திட்டப் பேச்சும் மற்றும் திடீர் பேச்சும் தமிழ் முத்திரைப் பதிக்கவிருக்கிறது. வாருங்கள், சொல்வேந்தர்களே!! ஒன்று கூடுவோம் தமிழால் தமிழ் உறவாக. இத்துடன், நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன். நன்றி.
துணைத் தலைவர் கல்வி
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு
Thursday, May 2, 2019
128 வது கூட்டம்
அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்
மலையிடையேபிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து
உலகின் இருளைப்
போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி
இரண்டு மட்டுமே!
ஒன்று செங்கதிர், மற்றது
செந்தமிழ்!
என்று
தண்டியலங்காரம் பேசுகிறது,
நம் அசதிக்குச்
சுடர் தந்த தேன் என்னும் பாவேந்தரின் பாட்டுக்கு ஒப்ப நம் மன்றத்தில் வரும் 128 -வது கூட்டம் மே 3 ம் தேதி மிகச் சிறப்பாக அல்கயாம் உணவக அரங்கில் நடைபெறவிருக்கிறது. இதில்
பொறுப்புகள் பலவிதம் என்னும் நெறியுடன் உங்கள் முன்னால் வரவிருப்பவர் நம் மன்றத்தின்
பெண்களின் நடிகர் திலகம் சொ.வே.
உமாவெங்கட் அவர்கள். மேலும், சொல்லேர்
உழவாக சொ.வே. பாக்கியலட்சுமி வேணு அவர்களின் வன்னம் என்னும் இலக்கணச் சொல்லைக்
கொண்டு மூன்று திட்டப் பேச்சு மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியாகக் கதை சொல்லி மற்றும்
மே தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான சுட்டிமன்றம்(பட்டிமன்றம்) நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்துடன் 128 வது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்.
நன்றி.
துணைத் தலைவர் கல்வி
சொ.வே.
பாக்கியலட்சுமி வேணு
Subscribe to:
Posts (Atom)