Wednesday, May 15, 2019

129 வது கூட்டம்

தமிழே விழி! தமிழா விழி!

பயிராலே நிலம் அறிமுகமாவது போலவும்

பழத்தாலே மரம் அறிமுகமாவது போலவும்

நிழலாலே உருவம் அறிமுகமாவது போலவும்

இலக்கியங்களாலே மொழி  அறிமுகமாவது போலவும்

அரபு மண்ணில் “தமிழ்” சொல்வேந்தர்களால்  அறிமுகமாவது போலவும்

நம் மன்றத்தின் ஒவ்வொரு கூட்டமும் முரசறைந்து முழங்குகிறது.

அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!! விருந்தினர்களே!! குழந்தைகளே!! உங்கள் அனைவருக்கும்  அன்பான வணக்கம்

நம் மன்றத்தின் 129  -  வது கூட்டம் வரும் மே 17  வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல்கயாம் உணவகத்தில் நடைபெறவுள்ளது. உங்களை!! “ புத்தம் புது பூமிக்கு”  அழைத்துச் செல்லவிருக்கிறார் நெறியாளர் சொ.வே. ராஜபிரபு, அன்றையக் கூட்டத்தில் சொல்லேர் உழவாக சொ.வே. மோகன்தாஸ் அவர்களின் “ ஊக்கம் “ என்னும் சொல்லைக் கொண்டு மூன்று திட்டப் பேச்சும்   மற்றும் திடீர் பேச்சும்   தமிழ் முத்திரைப்  பதிக்கவிருக்கிறது. வாருங்கள், சொல்வேந்தர்களே!! ஒன்று கூடுவோம் தமிழால் தமிழ் உறவாக. இத்துடன், நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன். நன்றி.

                                       
துணைத் தலைவர் கல்வி
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு



No comments:

Post a Comment

தொடர்புக்கு

Name

Email *

Message *