Monday, October 29, 2018

117 வது கூட்டம்


*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!!*
ஒரு மனிதன் தான் பிறந்த சூழலுக்குப் பொதுவாக பொறுப்பாளியாவதில்லை ஒரு மனிதன் தன்னை என்னவாக மாற்றிக் கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறான். என்பார் *அலெக்சாண்டர் கிரஹாம் பெல்*    
அவ்வகையில் நம் மன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தலைமைத்துவ பண்புகளின் பிறப்பிடமான இந்த சொல்வேந்தர் மன்றத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்
நம் மன்றத்தின் *117 வது கூட்டம் நவம்பர்வெள்ளிக்கிழமை,* அல்கயாம் உணவக அரங்கில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் நம் மன்றதின் தலைவர் *சொ.வே. இராமமூர்த்தி* அவர்களின் *“இனிய உளவாக”* என்னும் நெறியினைக் கொண்டு நடைபெறவிருக்கிறது இவரின் தமிழ்மொழி செழுமையும், சொல்வளமை, ஓசை ஒழுங்கு ஆகியன இயற்கையாக வந்து குழைகின்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று  
இக்கூட்டத்தில் சொல்லேர் உழவாக *“ நயம் “* என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளார், *சொ.வே. மோகன்தாஸ்* அவர்கள். இதனுடன், சீர்மிகு *மூன்று திட்டப் பேச்சுகள்* மற்றும் *திடீர் பேச்சரங்கம்* என மன்றத்தின் கூட்டம் ஒளிவிட்டு பிரகாசிக்கவிருக்கிறது. அணிதிரள்வீர்!! இத்துடன் *வரைவு நிகழ்ச்சி நிரலையும்* இணைத்துள்ளேன்.

துணைத் தலைவர் கல்வி
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு

Sunday, October 14, 2018

116 வது கூட்டம்


உடலுக்கு உரமேற்றும் உயிர்க்கு உணர்வூட்டும் மொழி, தமிழ். இலக்கிய இலக்கண அழகுடன், காலத்தை வென்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இனிமை குன்றாமல் நெஞ்சத்தை நெகிழச் செய்யும், அருந்தமிழ் தந்த அடையாள அரங்கத்தில் எழுது கோல் பிடித்து எண்ணங்களைப் பகிரும் எல்லையற்ற கனவுகள் சுமந்திருக்கும் *அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!! உங்கள் அனைவருக்கும் இளந்தமிழ் வணக்கம்.*

நம் மன்றத்தின் *116 கூட்டம் வரும் அக்டோபர் 19 வெள்ளிக்கிழமை* *அல்கயாம் உணவகத்தில்* (தமாம்) நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தின் நெறியாக *“பேச்சுக் கலை”* என்னும் தலைப்பினைக் கொண்டு உயர்தனிச் சஞ்சாரம் நிகழ்த்தவிருக்கும் *சொ.வே. மீரானின்* நெறியாளுகையி்ல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. சொல்லேர் உழவனாக இன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசானாக சொ.வே. சீனிவாஸ்அவர்களின் *“உன்னிப்பு”* என்ற சொல்லைக் கொண்டு *மூன்று திட்டப் பேச்சு, திடீர் பேச்சரங்கம் மற்றும் சிறுவர் நேரம்* என்று உல்லாச வனமாய் திகழவிருக்கிறது இவ்வனத்தில் தமிழ் மேகமென தவழ்ந்து விசையுடன் வாரீர், இத்துடன் *வரைவு நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்* நன்றி.

 துணைத் தலைவர் கல்வி,
*சொ. வே. பாக்கியலட்சுமி வேணு*.


Wednesday, October 3, 2018

115 வது கூட்டம்


அல்கோபார் தமிழ் உறவுகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்!!
ஒரு மொழியின் இலக்கியம் என்பது கண்ணாடியைப் போலச் செயல்பட வேண்டும். முகம் பார்க்க உபயோகிப்பதோடுபிரதிபலிக்கும் நம் பிம்பத்தைச் சரி பண்ணிக் கொள்ளவும் அக்கண்ணாடி உதவுவதைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் வங்கத்தின் மூத்த கவிஞரான சுபாஷ் முகோபாத்யாய.
அத்தகையச் சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அதனால் தான் சங்க காலம் தொடங்கி இக்காலம் வரையில் நம் மொழியின் இலக்கிய வேர்களை மறவாத வெற்றியாளர்களைக் கொண்டது சொல்வேந்தர் மன்றம். நம் மன்றத்தின் 115 வது கூட்டம் அக்டோபர் 5வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது
அழுத்தமான ஆழமான அனுபவங்கள் தரும் உணர்வுகளில் ஒரு படைப்பாளி சரணாகதி அடையும் போது தான் உன்னதமான இலக்கியங்கள் பிறக்கிறது என்பர். அத்தகைய இலக்கியங்களை வாசிப்பதன் அவசியத்தையும் அனுபவத்தையும், “வாசிப்பு என்பது வழக்கம் ஆக..... “ * என்னும்  நெறியாளுகையில் பேசவிருக்கிறார் *சொ.வே. மோகன் தாஸ்.
 மேலும் இன்றையக் கூட்டத்தின் சொல்லோர் உழவனாகஇன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசானாக சொ.வே. பாக்கியலட்சுமி அவர்களின் “விசை” என்ற இலக்கணச் சொல்லுடன் சோதிமிக்க மூன்று திட்டப் பேச்சுகளைக் கொண்டு கூட்டம் நடைபெறவுள்ளது.
 மேலும் கூட்டத்தை வளப்படுத்தும் விதமாக சொற் செல்வி சொ.வே வாசுகி ராஜராஜன் அவர்களின் திடீர் பேச்சரங்கம் மற்றும்நம் மன்றத்தின் “ தமிழ் விருட்சம் சொ.வே. ஹைதர் ” *அவர்களின் “ தமிழோடு விளையாடு “ என *தமிழ்ப் பண் பாடலாம் வாருங்கள். இத்துடன் வரைவு நிகழ்ச்சி நிரலை இணைத்துள்ளேன்.

துணைத் தலைவர் கல்வி,
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு

Monday, September 24, 2018

Wednesday, September 19, 2018

114 வது கூட்டம்


தமிழ் நேசமும் தமிழர் நேசமும் தகிக்கின்ற அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!! உங்கள் அனைவருக்கும் முத்தமிழ் வணக்கம்!!

நம் மன்றத்தின் 114 வது கூட்டம் வரும் *செப்டம்பர் 22 சனிக்கிழமை இளங்காற்றாய் தவழவிருக்கிறது. இக்கூட்டத்தில் பாரதியாரின் நினைவு தினமாகிய செப்டம்பர் 12 சிறப்பிக்கும் வகையில் பாரதியின் பைந்தமிழ் வரிகளில் நீராடவிருக்கும் சொ.வே. ராஜபிரபு அவர்கள்யார் பாரதி? “ * என்னும் நெறியைக் கொண்டு கவின் மாலையாய் *மூன்று திட்டப்பேச்சும் மேலும், இன்றையச் சொல் மற்றும் இலக்கண ஆசானாக சொ.வே. சுரேஷ்ஈதல் என்னும் சொல்லை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்இச்சொல்லை அன்றைய கூட்டத்தில் கோபுரமாய் விளங்கிடச் செய்வோம்.   புயலின் கைத்தலமாய்  திடீர் பேச்சரங்கம் என்னும் உய்யானவனத்தில் சொ.வே. சிவசக்தி அவர்கள் நம்மை மகிழ்விக்கவிருக்கிறார்இக்கூட்டத்தில் மற்றும் ஒரு சிறப்பானபயிற்சிப் பட்டறையைநடத்திக் கொடுக்கவிருப்பவர் சொ. வே. ஆசிக். சொல்வேந்தர்களே!!, * தமிழ் சாகரத்தில் *முகிழ்த்தெழ வாரீர். இத்துடன் 114  - கூட்டத்தின்  நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன். நன்றி.

துணைத் தலைவர் கல்வி
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு

Thursday, September 6, 2018

கவியரங்கம்

கவியரங்கம்


113 வது கூட்டம் நிகழ்ச்சி நிரல்



அல்கோபார் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்!!

உலகில் வாழும் ஆயிரக்கணக்கான மொழிகளிடையே ஈராயிர, மூவாயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட மொழிப் பழமையும் 25 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கிய வாழ்வுத் தொடர்ச்சியும் உடைய மொழிகள் சீனமும் தமிழும் மட்டுமே.மேலும், பழமைக்கு பழமையும், புதுமையிற் புதுமை மாறா இளமையையும் கொண்டுள்ளது தமிழ்மொழி. இத்தகைய அரிய மொழியை போற்றும் வகையில் அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் தமிழின் மீது கொண்ட நேசம், தமிழர் மீது கொண்ட நேசமாக ஒளிகொண்டு பிரகாசிக்கிறது.
அந்தவகையில் வரும் செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல்-கையாம் உணவகம் (தம்மாம்) நம் மன்றத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சொ.வே.ராஜதுரை அவர்களின் தந்தையின் அன்பினிலே என்னும் அருமையானநெறியைக் கொண்டு கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், இன்றை சொல் மற்றும் இலக்கண ஆசானாக சொ.வே. உமாவெங்கட் அவர்கள் நசை எனும் இலக்கணச் சொல்லை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் . அதனுடன் திட்டப் பேச்சு திடீர்ப் பேச்சரங்கம் என்று வானத்தின் ஒலி வீச்சினைக் காணலாம் வாருங்கள்
ஒரு சிலவரிகளில் ஓராயிரம் உணர்வுகளையும் பிம்பங்களையும் பதிவு செய்ய கவிதையினால் மட்டுமே முடியும் அந்தவகையில் நம் மன்றத்தின் கவியரங்கம் சொ.வே. மீரான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. முத்தமிழர் அனைவரும் அணி திரள்வீா். இத்துடன் நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்
துணைத் தலைவா் (கல்வி)
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு

நிகழ்ச்சி நிரல்

தொடர்புக்கு

Name

Email *

Message *