Saturday, January 27, 2024

2024 பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றம்


 

 

 

 

 

 

 

 

  

 

 

2024 பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றம் 

அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்கள் மன்றம் வழங்கும்
இந்திய பட்டிமன்ற வரலாற்றில் முதன் முறையாக
புத்தம் புதிய தலைப்பில் சிரிக்க சிந்திக்கவைக்கும்
சிறப்பு பட்டிமன்றம்

ஆறாம் அறிவு
வரமா👍? சாபமா👎?

⚖நடுவர் : MK. மீரான்

வரமே👍
1. வாசுகி இராஜராஜன்
2. ⁠வெங்கடேஸ்வரன்
3. ⁠உமா வெங்கட்

சாபமே👎
1. நாகேந்திரன்
2. ⁠சித்ரா ஜெயகாந்தன்
3. ⁠இராஜபிரபு

பொங்கல் விழா - 2024

 


அனைவருக்கும் வணக்கம்,

நலம் நலம் அறிய ஆவல், நமது மன்றத்தின் பொங்கல் விழா வருகின்ற பிப்ரவரி 02 ஆம் தேதி சஹாரா ரெசார்ட் சிஹாத் இல் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெற இருக்கிறது. (கூகுள் மேப் வாட்ஸ் ஆப் குழுவில் வெளியிடப்படும்)

அனைத்து உறுப்பினர்களும்/விழா குழுக்களுக்கும் விழா சிறக்க அதன் தயாரிப்பு பணிகளில் பரபரப்பாக செயல்பட்டு கொண்டு இருக்குறீர்கள், வருகின்ற நாட்களில் இன்னும் பரபரப்பாக செயல்படுவோம்.

அனைத்து நிகழ்வுகளும் சிறக்க, தயாரித்த படைப்பை நல்லபடியாக விழா தினத்தன்று செயலாக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தாங்கள் பொறுப்பு எடுத்து நடைபெற உள்ள நிகழ்வுகளுக்கு தேவையான உடமைகள் அனைத்தும் விழா நிகழ்வு இடத்திற்கு வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது அவை உங்களிடம் அல்லது உங்கள் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக வாங்க வேண்டிய உடமைகளை பட்டியலிட்டு, அதை பிரித்து ஒவ்வொருவர் பெயர் இட்டு பொறுப்பு வழங்கப்படும். அதை வாங்கி விழா நிகழ்வு இடத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பி வைக்கப்படும்.          

உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை புரிந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

மேலும் நீங்கள் அழைத்து வரும் விருந்தினர்கள் விவரங்களை வருகை பதிவை குழுவிடம் தெரிவிக்கவும். அவர்கள் பதிவு செய்துவிட்டார்களா என்று சரிபார்த்து கொள்ளவும். விருந்தினர்களுக்கு தேவையான அறிவிப்புகளை தெரியப்படுத்தவும்.

கூட்டு முயற்சிக்கு மற்றும் ஒரு உதாரணமாக இந்த விழா நிகழ்வை வரலாற்றில் இடம் பெறச் செய்வோம்.

Saturday, October 14, 2023

 இன்று நடந்த (13 அக்டோபர் 2023) நமது மன்றத்தின் 219 வது கூட்டத்தில் சோ.வே வெங்கட் மற்றும் திறன்மிகு சொல்வேந்தர் உமா வெங்கட் அவர்களின் பொன்விழா திருமண நாளையொட்டியும், திறன்மிகு சொல்வேந்தர் மோகன்தாஸ் மற்றும் சொல்வேந்தர் அருண் அவர்களின் பிறந்தநாள் விழாவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சொல்வேந்தர்கள் தமது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு விழா நாயகர்களை வாழ்த்தியும் கலாய்த்தும் மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
(வீடியோ உதவி : சொல்வேந்தர் மீரான்)


219 வது கூட்டம்

 அனைவருக்கும் வணக்கம்,

நமது மன்றத்தின் 219 வது கூட்டம் இன்று 13 அக்டோபர் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நெறியாளராக சொ.வே. சுரேஷ் சுப்பிரமணியம் அவர்கள் ஆசுகவி என்ற நெறியுடன்,மேலும் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்குபெற்று கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

விருதுகள்
சிறந்த பேச்சாளர்: சொ.வே. நாகேந்திரன்
சிறந்த மதிப்பீட்டாளர்: சொ.வே. சிவதயாளன்
சிறந்த அலுவலர் பணி: சொ.வே. சுரேஷ் சுப்ரமணியம்  

விருது பெற்றவர்களுக்கும் மேலும் வருகை புரிந்து சிறப்பித்த உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் எனது நன்றியும் வாழ்த்துகள்.     

நமது மன்றத்தின் அடுத்த கூட்டம் அக்டோபர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்து கொள்கிறேன். இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.  

நன்றி
கனகராஜ்
தலைவர், க.ஆ. 2023 – 2024









 

Wednesday, December 25, 2019

Annual Speech Contest 2019-20 AGENDA

Annual Speech Contest 2019-20

Dear Toastmasters of Al-Khobar Tamil Toastmasters Clubs,

It is my pleasure and privilege to share the most awaited Agenda of our Annual club English speech contest for the year 2019-2020.


As informed already to all the members, the Club Contest will be held on 27th December 2019 (Friday) at Holidays Restaurant, Dammam.  Please observe the agenda for the timings.

The contest will include the four category of toastmaster’s speech contest.

1.   Evaluation speech contest

2.   Table Topic speech contest

3.   International speech contest

4.   Humorous speech contest.  


The  registration will begin at 2.00 pm and the meeting will be started exactly by 2.45pm. Hence, we request all the contestants and assignee's to be at the venue by 2.00pm.

Also, please note that the pre-contest briefing and the Speaking lot selection session was held on Friday 19th December  2019 at Holidays restaurant.

The various committee members were requested to reach the venue for the pre-event arrangements as planned.


It is the great platform to develop our speaking, leadership and organizing ability. Let us deliver the grate performance in all our speeches for we request all the contestant to practice for the best. Let us also join our hands together as team to execute the event with joy, smooth, growth and of course 


"Challenge your Limits to be a Champion"


Kind Regards,

TM.Baghyalakshmi Venu

President

Al-Khobar Tamil TMC

Mob: 0532144780





Saturday, May 18, 2019

2019-2020ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள்.


மே 17, 2019 அன்று, 2019-2020 வருடத்துக்கான செயற்குழு தேர்தல் நடைபெற்றது, அன்றைய தினம் கீழ்காணும் மன்ற உறுப்பினர்கள் செயற்குழுவிற்க்காக தேர்ந்தெடுக்க பட்டனர்

2019-20ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள்.

தலைவர்: சொ.வே பாக்யலெட்சுமி
து. கல்வி: சொ.வே சீனிவாசன்
து. உறுப்பினர் சேர்க்கை: சொ.வே     சுரேஷ் சுப்ரமணியம்
து.தலைவர் மக்கள் தொடர்பு
சொ.வே மோகன்தாஸ்
செயலாளர்: சொ.வே. மீரான்
பொருளாளர்:சொ.வே. ஶ்ரீனிவாஸ்
செய்வகர்: சொ.வே.சுலைமான்

புதிய செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


Wednesday, May 15, 2019

129 வது கூட்டம்

தமிழே விழி! தமிழா விழி!

பயிராலே நிலம் அறிமுகமாவது போலவும்

பழத்தாலே மரம் அறிமுகமாவது போலவும்

நிழலாலே உருவம் அறிமுகமாவது போலவும்

இலக்கியங்களாலே மொழி  அறிமுகமாவது போலவும்

அரபு மண்ணில் “தமிழ்” சொல்வேந்தர்களால்  அறிமுகமாவது போலவும்

நம் மன்றத்தின் ஒவ்வொரு கூட்டமும் முரசறைந்து முழங்குகிறது.

அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!! விருந்தினர்களே!! குழந்தைகளே!! உங்கள் அனைவருக்கும்  அன்பான வணக்கம்

நம் மன்றத்தின் 129  -  வது கூட்டம் வரும் மே 17  வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல்கயாம் உணவகத்தில் நடைபெறவுள்ளது. உங்களை!! “ புத்தம் புது பூமிக்கு”  அழைத்துச் செல்லவிருக்கிறார் நெறியாளர் சொ.வே. ராஜபிரபு, அன்றையக் கூட்டத்தில் சொல்லேர் உழவாக சொ.வே. மோகன்தாஸ் அவர்களின் “ ஊக்கம் “ என்னும் சொல்லைக் கொண்டு மூன்று திட்டப் பேச்சும்   மற்றும் திடீர் பேச்சும்   தமிழ் முத்திரைப்  பதிக்கவிருக்கிறது. வாருங்கள், சொல்வேந்தர்களே!! ஒன்று கூடுவோம் தமிழால் தமிழ் உறவாக. இத்துடன், நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன். நன்றி.

                                       
துணைத் தலைவர் கல்வி
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு



Thursday, May 2, 2019

128 வது கூட்டம்


அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்

மலையிடையேபிறந்துமாந்தர் தொழ உயர்ந்து
உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி
இரண்டு மட்டுமே! ஒன்று செங்கதிர்மற்றது செந்தமிழ்!
என்று தண்டியலங்காரம் பேசுகிறது,
நம் அசதிக்குச் சுடர் தந்த தேன் என்னும் பாவேந்தரின் பாட்டுக்கு ஒப்ப நம் மன்றத்தில் வரும் 128 -வது கூட்டம் மே 3 ம் தேதி மிகச் சிறப்பாக அல்கயாம் உணவக அரங்கில்  நடைபெறவிருக்கிறது. இதில் பொறுப்புகள் பலவிதம் என்னும் நெறியுடன் உங்கள் முன்னால் வரவிருப்பவர் நம் மன்றத்தின் பெண்களின் நடிகர் திலகம்  சொ.வே. உமாவெங்கட் அவர்கள். மேலும்சொல்லேர் உழவாக சொ.வே. பாக்கியலட்சுமி வேணு அவர்களின் வன்னம் என்னும் இலக்கணச் சொல்லைக் கொண்டு மூன்று திட்டப் பேச்சு மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியாகக் கதை சொல்லி மற்றும் மே தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான சுட்டிமன்றம்(பட்டிமன்றம்) நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.     
இத்துடன் 128 வது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்.

நன்றி.                                                                
துணைத்  தலைவர் கல்வி      
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு



Sunday, March 24, 2019

126 வது கூட்டம்


*கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்*
*கழையிடை ஏறிய சாறும்*,
*பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்*
*பாகிடை ஏறிய சுவையும்,*
*நனிபசு பொழியும் பாலும் - தென்னை*
*நல்கிய குளிரிள நீரும்*,
*இனியன என்பேன் எனினும் - தமிழை**
*என்னுயிர் என்பேன் கண்டீர்!*
கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் - அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் *பாவேந்தர் பாரதிதாசன்*  கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா!. 
இத்தகு சுவைமிகு தமிழின் மீது பற்று கொண்ட*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களே!!* நம் மன்றத்தின் *126 - வது கூட்டம்* வரும் *மார்ச் 29 வெள்ளிக் கிழமை* நடைபெறவிருக்கிறது. இதில், நம் மன்றத்தின் தமிழ்த் தென்றல்  *சொ.வே. வெங்கடேஸ்வரன்*அவர்களின், நெறியாளுகையில்  சொல்லேர் உழவாக இன்றையச் சொல் மற்றும் இலக்கண ஆசானாக *சொ.வே. அரவிந்தன்* அவர்களின் *“ஏண்”*என்னும் சொல்லைக் கொண்டு *மூன்று திட்டப் பேச்சுகள்* மற்றும் *திடீர் பேச்சரங்கம்*என்று கோடையில் குளிர் தமிழ் காற்றினைக் கொண்டாட!! *அனைவரும் வாரீர்*இத்துடன் 126-வது கூட்டத்தின் *வரைவு நிகழ்ச்சி நிரலையும்* இணைத்துள்ளேன்.

துணைத் தலைவர் கல்வி
*சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*

Tuesday, March 12, 2019

125 வது கூட்டம்


*பெண்ணே!!*
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி 
தடைகளைப் புறம் தள்ளு 
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு 
உள்ளிருந்து திறம் காட்டும்
*பெண்ணினத்தின் மேன்மையை*, 
முன்னிறுத்தும் வழி தேடு!

என, பெண்ணின் பெருமை பேசும் *அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்*. நம் மன்றத்தின் *125 வதுகூட்டம் வரும் வெள்ளிக் கிழமை *மார்ச் 15* அன்று நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில், “*ஈன்று புறம் தந்த**” பெண்ணின் பெருமையைப் போற்றும் படியாக அமையவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நம் மன்றத்தில் பைந்தமிழ் பேசும் *சொ.வே. வாசுகி ராஜராஜன்அவர்களின் “*அழகின் அழகே*” என்னும் நெறியினைக் கொண்டு  சீர்மிகு மூன்று *திட்டப்பேச்சுகள்மற்றும் *மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கமும்*நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் 125 வது கூட்டத்தின் *வரைவு நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன்*.நன்றி.

குறிப்பு : கருத்தரங்கின் கருப்பொருள்   “*பெண்ணின் பெருமை போற்றும் படி*” அமைந்திருக்க வேண்டும் தலைப்பு *உங்கள் விருப்பம்.*

*துணைத் தலைவர் கல்வி
*சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*



Friday, March 1, 2019

*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்*
நம் மன்றத்தின் *124*- வது கூட்டம்

துணைத் தலைவர் கல்வி 
*சொ.வேபாக்கியலட்சுமி வேணு*


Wednesday, January 30, 2019

123வது கூட்டம்



*அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்*
*அறிவும் அறமும் மானிட* வாழ்வியலின் அர்த்தமுள்ள பெறுமதிகளையும் முன்னிறுத்தும் நிகழ்வாக *நம் மன்றத்தின்ஒவ்வொரு  கூட்டமும் அமைந்திருக்கும். இந்த அடையாளப்படுத்தல் *சமய சமூக* வேறுபாடுகளின் அடையாளங்களைப் *புறம் தள்ளி மாெழி*என்ற ஒரு அடையாளத்திற்குள் அதன் *விழுமியங்களையும்* பகுத்தறியப்பட்ட அந்தப் பண்பாட்டுக் கூறுகளையும், இலக்கிய செழுமைகளையும், இயற்கையோடு இணைந்த வாழ்வியலையும் உயிர்ப்பு மிக்க கலைகளையும் ஓரிடத்தில் விளக்குகின்ற வகையில் நம் மன்றத்தின் *123*- வது கூட்டத்தின் தலைப்பு *தமிழர் கிராமியக் கலைகள்* என்னும் நெறியினைக் கொண்டு உங்கள் முன்னால் வரவிருப்பவர் *சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*. மேலும் *சொல்லேர் உழவாக* *"நிரை"* என்ற சொல்லுடன் இன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசானாக "சொ.வே. அருண்" அறிவிக்கவிருக்கிறார்.சீர்மிகு மூன்று திட்டப் பேச்சுகள் மற்றும் திடீர் பேச்சு என்று  நம் மொழி எவ்வளவு அழகானது என்பதை உணர *அனைவரும் திரள்வீர் உணர்வீர்*. இத்துடன் *வரைவு நிகழ்ச்சி நிரலையும், இணைத்துள்ளேன்*. நன்றி.  

துணைத் தலைவர் கல்வி 
*சொ.வே. பாக்கியலட்சுமி வேணு*



Thursday, January 24, 2019

122வது கூட்டம்

அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்.

நம் மன்றத்தின் 122 கூட்டம் ஜனவரி 25 அதாவது நாளை மாலை 4,00 மணிக்கு அல்கயாம் உணவக அரங்கில் நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன். நன்றி. ( 121 ஆங்கில போட்டி ஜனவரி 5 நடைபெற்றது).

துணைத் தலைவர் கல்வி ,
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு.

நிகழ்ச்சி நிரல்

Sunday, January 6, 2019

ALKHOBAR TAMIL TOASTMASTERS CLUB CONTEST 2019 - RESULTS


The Top 3 selections in all the 4 contests are as follows:
Humorous Speech:
One disqualification for not meeting the time frame.
3. TM Ramamoorthy
2. TM Arun Palanisamy
1. TM Gunasekar

Evaluation speech:
3. TM Mohandoss
2. TM Rajarajan
1. TM Arul Sakthi

Table Topic speech:
3. TM Uma Venkat
2. TM Mohandoss
1. TM Rajadurai

International speech:
3. TM Uma Venkat
2. TM Rajadurai
1. TM Suresh Subramaniyam. 

தொடர்புக்கு

Name

Email *

Message *